மீண்டும் புதுப்பொலிவுடன் உழவர் சந்தை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ.ராஜா உழவர் சந்தையை துவக்கி வைத்து விவசாயிகளிடம் முதல் விற்பனையாக காய்கறிகளை பெற்றுக் கொண்டார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மீண்டும் புதுப்பொலிவுடன் உழவர் சந்தை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா உழவர் சந்தையை இன்று தொடங்கி வைத்து விவசாயிகளிடம் முதல் விற்பனையாக காய்கறிகளை பெற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த திமுக ஆட்சியில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த உழவர் சந்தை கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் காரணமாக செயல்படாமல் இருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவிலில் உழவர் சந்தை புதுப்பொலிவுடன் இன்று தொடங்கப்பட்டது.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா உழவர் சந்தையை இன்று தொடங்கி வைத்து விவசாயிகளிடம் முதல் விற்பனையாக காய்கறிகளை பெற்றுக் கொண்டார். மேலும் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் ஆலோசனைகளை வழங்கினார்.

உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை / தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Aug 2021 8:15 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  சமையலர்களுக்கு பதவி உயர்வு ஆணை -அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்
 2. தேனி
  யுடியூப்பில் அவதூறு செய்தி: தேனி எஸ்.பி.யிடம் தி.மு.க. புகார்
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறு குறைக்க சேதமான கழிப்பிடம்...
 4. விளையாட்டு
  ஐபிஎல் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் மகத்தான சாதனை
 5. குமாரபாளையம்
  அங்கன்வாடி மையத்திற்கு பேன், பாய்கள் வழங்கினார் தி.மு.க. கவுன்சிலர்
 6. ஜெயங்கொண்டம்
  சிறுபாலம் அமைப்பதற்கான பணியினை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்
 7. தேனி
  கடமலைக்குண்டு அருகே டூவீலர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
 8. ஜெயங்கொண்டம்
  பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் துணியை கட்டி காங்கிரஸார்...
 9. இந்தியா
  நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஜெயில்: உச்சநீதிமன்றம் உத்தரவு
 10. ஜெயங்கொண்டம்
  தங்கை கண் முன்னே கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு