/* */

புகழ் பெற்ற ஆடித்தபசு விழா-பொது மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23 ம் தேதி பொது மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை

HIGHLIGHTS

புகழ் பெற்ற ஆடித்தபசு விழா-பொது மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை
X

சங்கரன்கோவில்

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23 ம் தேதி பொது மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 23 ம் தேதி பொது மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடி தபசு விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும்.

மாலை பூஜைகளுக்கு மண்டகப்படிதாரர்கள் அபிஷேகப் பொருட்கள் மற்றும் பூஜைப் பொருட்களை வழங்கினால் அதன் மூலம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பூஜை நேரங்களில் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.

மேற்படி நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணும் வகையில் யூடியூப் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலின் ஆடி தபசு விழாவை முன்னிட்டு வரும் ஜூலை 23 ஆம் தேதி பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

மண்டகப்படி பூஜையின்போது மட்டும் அன்றைய தினத்திற்குரிய மண்டல மண்டக படிதாரர்கள் அடையாள சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் வசதிக்காக ஜூலை 23-ஆம் தேதி மேற்படி பூஜை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக நேரலையாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோவிலுக்கு வருகை புரிவதை தவிர்த்து முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Updated On: 22 July 2021 1:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு