/* */

திசையன்விளையில் தலைக்கவசம் அணிந்து வந்த கவுன்சிலர்களால் பரபரப்பு

திசையன்விளை பேரூராட்சியில் தலைக்கவசம் அணிந்து பதவியேற்க வந்த கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திசையன்விளையில் தலைக்கவசம் அணிந்து வந்த கவுன்சிலர்களால் பரபரப்பு
X

திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர்கள் தலையில்  ஹெல்மட் அணிந்து வந்தனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தென்காசி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி யில் உள்ள 18 வார்டுகளில் அ.தி.மு.க.9 வார்டுகளிலும்,தி.மு.க.2 ,வார்டுகளிலும,காங்கிரஸ் 2வார்டுகளிலும்,தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க. தலா 1வார்டிலும் சுயேச்சை 3 வார்டிலும் ஜெயித்து இருந்தனர். 2, சுயேச்சைகள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் தி.மு.க. வில் சேர்ந்து விட்டனர். இறுதி நிலவரப்படி பா.ஜ.க உறுப்பினர் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கொடுத்ததால் பேரூராட்சி தலைவராக அ.தி.மு.க.வைச்சேர்ந்தவர் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது .

இந்த நிலையில் எதிர் தரப்பினரும் தலைவர் தேர்தலில் போட்டியிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். ஆள் பிடிக்கும் வேலை நடக்கும் என்பதால் தங்கள் உறுப்பினர்களுக்கும் ஆதரவு கொடுக்கும் பா.ஜ.க. உறுப்பினர்க்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கணேசராஜா மாவட்ட ஆட்சி தவைவரிடம் மனு கொடுத்தார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் திசையன்விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர் ஆக மொத்தம் 10 பேர் தலைக்கவசம் அணிந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் அப்பகுதியில். பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி நிருபர்களிடம். பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேரூராட்சி க்கு பதவியேற்க வந்தால் மண்டையை உடைத்து விடுவதாக எதிர் தரப்பினர் போன் மூலம் மிரட்டல் விடுத்ததால் தலைக்கவசம் அணிந்து வந்ததாக கூறினர்.

பின்னர் பேரூராட்சி அலுவலகம் சென்று தலைக்கவசத்தை கழற்றி வைத்து விட்டு 10 பேர்களும் பதவி பிரமாணம் எடுத்து க்கொண்டனர். அவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கோபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள்,ஒன்றிய செயலாளர் கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே.செல்வராஜ்,பால்துரை,டிம்பர் செல்வராஜ்,சண்முகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு. க. வேட்பாளர் களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

Updated On: 3 March 2022 2:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  5. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  6. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு