Begin typing your search above and press return to search.
திசையன்விளை அருகே நோயுற்ற ஏழைப் பெண்ணுக்கு திமுக பிரமுகர் நிதியுதவி
திசையன்விளை அருகே நோயுற்ற ஏழைப் பெண்ணுக்கு தி.மு.க. பிரமுகர் வீனஸ் வீர அரசு நிதியுதவி வழங்கினார்.
HIGHLIGHTS

ராமன்குடியில் நோயுற்ற ஏழைப் பெண்ணுக்கு நிதியுதவி வழங்கிய தி.மு.க.பிரமுகர் வீனஸ் வீர அரசு.
தென்காசி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ராமன்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பொன்முத்து நாடார். நோய்வாய்ப்பட்ட இவரது மகள் கிருஷ்ணவேணியுடன் பொன்முத்து நாடார் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு வந்தார்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட நெல்லை மாவட்ட தி.மு.க. விவசாய அணி முன்னாள் அமைப்பாளர் வீனஸ் வீர அரசு கிருஷ்ணவேணி இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி வழங்கினார். மேலும் தேவைப்பட்டால் உதவி செய்வதாக கூறினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. இலக்கிய அணி நவ்வலடி லிங்க தமிழரசன், தி.மு.க. கிளைச் செயலாளர்கள் ராமன்குடிபாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணா புரம் அற்புத பாண்டி, வழக்கறிஞர்கள் அரவிந்த் ராஜ், ராமகிருஷ்ணன், நவ்வலடி பொன்ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.