/* */

அதிகரிக்கும் கொரோனா தொற்று: அலட்சியம் காட்டும் சங்கரன்கோவில் நகராட்சி

சங்கரன்கோவிலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

அதிகரிக்கும் கொரோனா தொற்று: அலட்சியம் காட்டும் சங்கரன்கோவில் நகராட்சி
X

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 35க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 12, பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ஹோட்டல்களில் பணிபுரிபவர்கள் யாரும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, ஒமிக்ரான் வைரஸ் பரவவும் வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முறையாக கொரோனா விதிகளை பின்பற்றாத கடைகளில் பணிபுரிபவர்கள், பொதுமக்கள் மீது அபராதம் விதித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அலட்சிய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Updated On: 19 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  3. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  4. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  5. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  7. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  8. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  10. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!