இரவு நேரங்களில் மருத்துவக் கழிவுகள் எரிப்பு: மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி
சங்கரன்கோவில் பகுதிகளில் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு எரிப்பதால் பொதுமக்கள் சுவாசக்கோளாறால் அவதி.
HIGHLIGHTS

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பெரிய குளம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள பெரிய குளம் உள்ளது. குளங்களில் நீர் இல்லாத பகுதிகளை அறிந்த மர்மநபர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இரவு முழுவதும் எரிக்கப்படுவது தினந்தோறும் நிகழ்வாக மாறி வருகிறது.
இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமம், உடனடியாக மருத்துவ கழிவுகள், கெமிக்கல் கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள், உள்ளிட்டவற்றை குளத்தில் கொட்டி விடிய விடிய ஏரிப்பதை உடனடியாக தடுத்து, தங்களுக்கும், குழந்தைகளுக்கும் சுவாசக்கோளாறு ஏற்படுவதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நீர்நிலைகளில் கொட்டப்படும் மற்ற கழிவுகளையும் அப்புறப்படுத்த அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.