/* */

கழிவுநீர் பிரச்சனையால் கொலை முயற்சி, 3 நபர்கள் கைது

கழிவுநீர் பிரச்சனையால் கொலை முயற்சி, 3 நபர்கள் கைது
X

தென்காசி மாவட்டத்தில் கழிவுநீர் பிரச்சனையால் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தட்டியாபுரம் பகுதியில் வெள்ளபாண்டி மற்றும் அவரது மனைவி வசித்து வந்துள்ளனர். இவர்கள் வசித்து வரும் தெருவில் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் அந்த தெருவில் வசித்து வரும் உதயகுமார், லேமாக், சமாதானம், மருதநாயகம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து வெள்ளபாண்டி மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளனர்.

இதை பார்த்த வெள்ளபாண்டி அவர்களிடம் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மேற்படி ஐந்து நபர்களும் வெள்ளபாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வெள்ளப்பாண்டி கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்த லேமாக் (50) அவரது மனைவி சமாதானம் (42) மகன் உதயகுமார் (22), இசக்கி என்பவரின் மகன்களான மருதநாயகம் (45) மற்றும் ராமச்சந்திரன் ஆகிய ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து லேமாக், சமாதானம் மற்றும் மருதநாயகம் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர்.

Updated On: 16 Jan 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  7. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  9. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  10. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு