Begin typing your search above and press return to search.
திருமணத்திற்கு வந்தவரிடம் ரூ. 1 லட்சம் திருடியவர் கைது

சங்கரன்கோவிலில் மணமகள் அறையிலிருந்த ஒரு லட்சம் ரூபாயை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த தனது உறவினரின் திருமணத்திற்காக விக்னேஸ்வரி என்பவர் சென்னையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரி தன் கைப்பையில் வைத்திருந்த பணம் 1 லட்சத்து 500 ரூபாயை மணப்பெண்ணின் அறையில் வைத்து விட்டு திருமண மேடைக்கு சென்று மீண்டும் வந்து கைப்பையை பார்த்த போது அது திருடு போனதை அறிந்து விக்னேஸ்வரி சங்கரன்கோவில் நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மணப்பெண்ணின் அறையிலிருந்து பணத்தை திருடியது சங்கரன்கோவிலை சேர்ந்த முப்புடாதி என்பவர் மகன் ராஜா (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.