சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து  விவசாயி பலி
X

சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் பகுதியைச் சேர்ந்த பூலையா என்பவரது மகன் பூலார். இவர் ஆலங்குளம் பகுதியில் மனைவி மற்றும் இரண்டு மகன்களோடு விவசாயத்துடன் ஆடு மேய்க்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று காலையில் ஆடுகளுக்கு இலைதளைகள் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்ததனர். இதையடுத்து. சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் உடற்கூறு ஆய்வுக்காக விவசாயி பூலார் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 July 2021 11:40 AM GMT

Related News