Begin typing your search above and press return to search.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
சங்கரன்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS

சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம்.
சங்கரன்கோவில் மகளிர் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த குருசாமி மகன் நம்பிராஜன் (32). கூலி தொழிலாளியான இவர், குருவிகுளம் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவரின் மகளான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளி நம்பிராஜனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.