பொது பாதை பிரச்சனையில் அரிவாள் வெட்டு- ஒருவர் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பொது பாதை பிரச்சனையில் அரிவாள் வெட்டு- ஒருவர் கைது
X

தென்காசி மாவட்டத்தில் பொது பாதை பிரச்சனையில் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தென்காசி மாவட்டம், கேவி நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமலிங்கபுரத்தில் வசித்து வரும் சுப்பையா (40) என்பவரின் வீட்டிற்கு பின்புறம் அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (31) என்பவரின் தாத்தாவிற்கு சொந்தமான இடத்தில் அவரின் பெரியப்பா வீடு கட்டிய போது சுப்பையாவிற்கு சொந்தமான பொது பாதையிலும் சேர்த்து வீடு கட்டி உள்ளனர். பொதுப் பாதையை விட்டு விட்டு வீடு கட்டுங்கள் என்று சுப்பையா கூறியதால் இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த சுப்பையாவை அங்கு வந்த மணிமாறன் மற்றும் தங்கசாமி ஆகிய இருவரும் சேர்ந்து அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு மணிமாறன் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் சுப்பையாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து சுப்பையா கேவி நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ராஜகோபால் விசாரணை நடத்தி மேற்படி இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் தங்கசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 17 March 2021 11:30 AM GMT

Related News