/* */

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
X

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சின்னக்கோவிலான்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் தலைமையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் .வி.எம்.ராஜலெட்சுமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஏழை எளிய மக்களுக்கு, எளிதாக மருத்துவ சிகிச்சை கிடைக்கப்பெற வேண்டும். என்பதற்காக இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழகத்திலுள்ள குக்கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், தென்காசி சுகாதார மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை இணைந்து கிராமங்களில் மருத்துவசேவை கிடைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் வட்டாரத்திற்கு மூன்று முகாம்கள் வீதம் முப்பது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நடப்பாண்டு 2020-2021-ல் இதுவரை 17 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. 18-வது சிறப்பு முகாமாக இன்று (23.01.2021) மேலநீலிதநல்லூர் வட்டாரத்திற்குட்பட்ட, சின்னகோவிலான்குளத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவ முகாமில் சிறப்பு சிகிச்சையாக ஈ.சி.ஜி, ஸ்கேன், ரத்த அழுத்தம், சர்க்கரை கண்டறிதல், கொழுப்பின் அளவு, சிறுநீர் உப்பு, சளி பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, மார்பக புற்றுநோய், சித்தவைத்தியம், கண்மருத்துவம், பல்மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மற்றும் எலும்பு முறிவு ஆகிய சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டு பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இதுவரை தென்காசி மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில்; 660 கர்ப்பிணி பெண்கள், 279 பச்சிளம் குழந்தைகளும் மருத்துவ அலுவலர் மூலம் சுமார் 9000 நபர்களும், மருத்துவ பல்துறை நிபுணர்கள் மூலம் 1700 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம் 85 பயனாளிகள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் இது போன்ற சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து கண்காட்சியினையும், தொழுநோய், குடும்ப நலம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியினையும் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் 35 கர்ப்பிணி பெண்களுக்கும், 75 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனையாக 185 நபர்களில் சர்க்கரை நோயாளியாக 13 பேர் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சளிப்பரிசோதனை 25 நபர்களுக்கும், ஹெச்.ஐ.வி. பரிசோதனை 12 நபர்களுக்கும், ஸ்கேன் பரிசோதனை 30 நபர்களுக்கும், மார்பக புற்றுநோய் 20 நபர்களுக்கும், கண்மருத்துவம் 22 நபர்களுக்கும், மனநல மருத்துவம் 17 நபர்களுக்கும், எலும்புமுறிவு சிகிச்சை 9 நபர்களுக்கும், சித்தமருத்துவம் 29 நபர்களுக்கும், சிகிச்சை வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 14 பேர் பரிந்துரைக்கப்பட்டு ஆகமொத்தம் 486 பயனாளிகள் பங்குபெற்று பயனடைந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, துணை இயக்குநர் சுகாதாரபணிகள் மரு.அருணா, கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர் கண்ணன் (எ) ராஜி, பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, முன்னாள் ஆவின் தலைவர் ரமேஷ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் உட்பட மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jan 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  2. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  3. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  5. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  7. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  8. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  9. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  10. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?