/* */

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

Today Political News in Tamil -லாக்கப் டெத் பொருத்தவரை தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவது எல்லோருக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
X

செய்தியாளர் சந்திப்பில் ஜி. கே. வாசன்.

Today Political News in Tamil - தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குறை மக்களிடையே உள்ளது. வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. எதிர்பார்த்த மக்கள் ஏமாற்ற நிலையில் உள்ளனர். முக்கிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஆளுநர் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்திய திருநாட்டின் கலாச்சாரம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார் என்று நான் நம்புகிறேன்.

பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. அதில் சுயநலம் எதுவும் கிடையாது. பொது நலம் கருதியே குற்றசாட்டை கூறுகிறார். தமிழக அரசு அதிக அளவில் கடனில் உள்ளது. மேலும் கடன் வாங்கியே திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பொருளாதார ரீதியாக தன்னை உயர்த்தி கொண்டால்தான் திட்டத்தை விரைந்து முடிக்க முடியும். நல்ல திட்டங்களை அமுல்படுத்த முடியும். முறையான திட்டமிடல் இல்லை என்றுதான் அண்ணாமலை சுட்டி காட்டுகிறார்.

உதாரணம் தீபாவளி ஆவின் இனிப்பு பலகாரம், தற்போது ஆவில் ஊட்டச்சத்து பானம். இதை மக்கள் ஏற்பதில்லை என்பது தான் உண்மை. அரசிடம் வெளிப்படைத்தன்மை தேவை என்றுதான் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. சென்னை, கோயமுத்தூர், மதுரை, திருச்சி,போன்ற பெரிய மாநகராட்சியாக இருந்தாலும் சரி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, கிராமங்களில் கூட வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டால் வீட்டை குறி வைத்து கொள்ளை அடிக்கப்படுகிறது.

சில இடங்களில் கொள்கையுடன் சேர்த்து கொலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். கொலை செய்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆட்சியில் தைரியம் வந்து விட்டது. அந்த தைரியத்தை குறைக்கக்கூடாது. முடக்க வேண்டும் அதற்கு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. எனவே அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினை யில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

லாக்கப் டெத் பொருத்தவரை தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறுவது எல்லோருக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை நண்பர்கள் நல்லவர்களுக்கு துணை நிற்க வேண்டும் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும். தவறு செய்பவர்கள் யார் என்று விசாரணைக்குப் பின் தான் தெரியும். விசாரணைக்கு முன் தவறுகளை செய்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கக்கூடிய நிலை ஏற்பட்டு பயத்திலோ அல்லது பீதியிலோ அவர் இறக்கும் நிலை ஏற்பட்டால் நல்ல ஜனநாயகத்திற்கு அது எடுத்துக் காட்டல்ல. அரசு இதில் சரியாக கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை வைத்திருப்பது முதல்வர்தான் என்பதை நினைவுகூர விரும்புகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Jun 2022 11:25 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  4. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  5. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  8. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  9. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்