அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

செங்கோட்டை அருகே அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
X

உயிரிழந்த முகமது மைதீன்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பண்பொழி பகுதியை சேர்ந்தவர் செய்யது. இவரது மகன் முகமது மைதீன் (வயது 46) ஆட்டோ டிரைவரான இவர் இன்று பண்பொழி -திருமலைகோவில் சாலையில் உள்ள அவரது உறவினரான ஜவாகிருல்லா என்பவரது தோட்டத்திற்கு இன்று காலை சென்றுள்ளார்.

அப்பொழுது நேற்று இரவு பண்பொழி பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மின் கம்பி ஒன்று அறுந்து தோட்டத்தில் கிடந்துள்ளது.

இதை கவனிக்காத முகமது மைதீன் மின் கம்பியில் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது மைதீன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அச்சன்புதூர் போலீசார் முஹம்மது மைதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 July 2022 7:47 AM GMT

Related News