கடையநல்லூர் பகுதியில் 7 பேருக்கு கொரானா தொற்று உறுதி

Corona Cases in Tamilnadu - கடையநல்லூர் பகுதியில் 7 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடையநல்லூர் பகுதியில் 7 பேருக்கு கொரானா தொற்று உறுதி
X

பைல் படம்.

Corona Cases in Tamilnadu -கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் 5 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து நகராட்சிப் பகுதியில் தடுப்பு நடவடிக்கையை நகராட்சி சுகாதார அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சிலருக்கு கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடையநல்லூர், வார்டு 17, 15, 31, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தஞ்சாவூரிலிருந்து கடையநல்லூருக்கு வேலை விஷயமாக வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதே போல் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம், பாலஅருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல் சிவா கண்ணன் மற்றும் அதிகாரிகள் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கினர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தப் பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் ஆலோசனை பெறவும், நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தொற்று உள்ள வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீட்டில் உள்ளவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-24T16:14:04+05:30

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 2. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 3. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 4. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
 7. ஈரோடு
  அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
 8. தமிழ்நாடு
  திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரம பாதாள அறையில் இளம் பெண் அடைப்பு?
 9. குமாரபாளையம்
  அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
 10. குமாரபாளையம்
  பூட்டி கிடந்த படிப்பகம் திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன்...