வி கே புதூர் அருகே சாலை விபத்து ஒருவர் படுகாயம்

வி கே புதூர் அருகே சாலை விபத்து ஒருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வி கே புதூர் அருகே சாலை விபத்து ஒருவர் படுகாயம்
X

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் அருகே நடந்த சாலை விபத்து

சுரண்டை அடுத்த கீழ சுரண்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எபனேசர் (வயது 25). இன்று காலையில் தனக்குச் சொந்தமான பைக்கில் வீரகேரளம்புதூர் அருகே உள்ள ஒரு சர்ச்சுக்கு பிரார்த்தனைக்காக சென்றுவிட்டு மதியம் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

பைக் பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டு இருக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை முந்துவதற்கு முயற்சி செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் கால் பகுதியில் பலத்த காயமடைந்தார்.தகவல் அறிந்ததும் சுரண்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் விரைந்து வந்து எபநேசரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

டிப்பர் லாரி ஓட்டி வந்த டிரைவர் மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிப்பாண்டி மகன் முத்துப்பாண்டி (வயது 30) சுரண்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Updated On: 19 July 2021 1:59 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...