வீ.கே.புதூர் அருகே மது போதையில் நண்பரை, வெட்டி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது

வீ.கே.புதூர் அருகே மது போதையி் நண்பரை, வெட்டி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வீ.கே.புதூர் அருகே மது போதையில் நண்பரை, வெட்டி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது
X

தென்காசி அருகே போதையில் நண்பரை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ( பைல் படம்)

வீ.கே.புதூர் அருகே உள்ள கழுநீர்குளம் பட்டமுடையார்புரம் ரோட்டில் வசித்து வருபவர் தர்மராஜ் மகன் செல்வகணி (வயது 36) இவரும் அதே ஊரைச் சேர்ந்த பாரதியார் தெருவில் வசித்து வரும் ராமர் என்பவர் மகன் சக்தி (வயது 38) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிவார்களாம்.

இந்நிலையில் திருமணமான சக்தி கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து மன வருத்தத்தில் இருந்த சக்தி நேற்று மாலையில் தனது நண்பர் செல்வக்கனியிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்போது சக்தி குடிபோதையில் இருந்ததால் இப்போது அதை பேச வேண்டாம் நாளை காலையில் பேசிக்கொள்ளலாம் என செல்வகணி கூறியுள்ளார்.

நீ ஏன் எனது மனைவியை இன்றே என்னுடன் சேர்த்து வைக்காமல் தாமதப்படுத்துகிறாய் இன்றே என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என சக்தி நண்பனை வலியுறுத்தியுள்ளார்.

செல்வகனி நாளை காலை பார்த்துக்கொள்ளலாம் என கூறி மறுக்கவே போதையில் எதிர்பாராதவிதமாக சக்தி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வக்கனியை வெட்டியுள்ளார்.

இதில் இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் வெட்டுக்காயம் அடைந்த செல்வகனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். உதவி ஆய்வாளர் காஜா முகைதீன் வழக்குப்பதிவு செய்து நண்பனை வெட்டியதாக சக்தியை கைது செய்தனர்.

Updated On: 19 July 2021 1:52 PM GMT

Related News