/* */

ஆழ்வார்குறிச்சியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது

ஆழ்வார்குறிச்சியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆழ்வார்குறிச்சியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த மூன்று பேர் கைது
X

ஆழ்வார்குறிச்சியில் சட்டவிரோதமாக அரிவாள், ஆயுதங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட மூன்று பேர்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் காவல் துறையினரின் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்போர் போன்ற நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பழைய குற்றவாளிகள்,குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருப்போரின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பான்குளம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சடையன் (70) என்பவருக்கு சொந்தமான இரும்பு பட்டறையில் 50 பழைய அரிவாள்,15 புதிய அரிவாள்,2 வாள் கைப்பற்றப்பட்டது.

அதே பகுதியில் உள்ள லட்சுமி சங்கர் என்பவரின் பட்டறையில் இருந்து 10 அரிவாள் கைப்பற்றப்பட்டது. மேலும் மடவார்விளாகத்தை சேர்ந்த சேகர் என்பவரின் பட்டறையில் இருந்து 30 அரிவாள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 28 Sep 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?