/* */

கற்றல் கல்வி மைய கட்டிடத்தை திறந்து வைத்த தமிழக சபாநாயகர்

கடையத்தில் செல்லம்மாள் பாரதியின் 125 வது திருமண நாளில் 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கற்றல் கல்வி மைய கட்டிடத்தை தமிழக சபாநாயகர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கற்றல் கல்வி மைய கட்டிடத்தை திறந்து வைத்த தமிழக சபாநாயகர்
X

கற்றல் கல்வி மையத்தை திறந்து வைத்த தமிழக சபாநாயகர் அப்பாவு.

கடையத்தில் செல்லம்மாள் பாரதியின் 125 வது திருமண நாளில் 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கற்றல் கல்வி மைய கட்டிடத்தை தமிழக சபாநாயகர் திறந்துவைத்தார்.

பாரதியார் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மாள் பாரதி மையம் அமைக்க சேவாலயா நிறுவன தலைவர் முரளிதரன் மற்றும் நிர்வாக கமிட்டியினர் முடிவு செய்ததை தொடர்ந்து பாரதியார் பெயரில் கடையத்தில் இயங்கி வந்த நூலகக் கட்டடத்தைப் புதிப்பித்து அங்கு செல்லம்மாள் பாரதி மையம் அமைத்து பாரதி செல்லம்மாளின் முழு உருவச் சிலையும் அமைத்துத் தருவதாகவும் அதற்கு அனுமதி தருமாறும் கோரியதையடுத்து நூலகத் துறை அனுமதி வழங்கியது.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணி துவங்கியது, இந்த கட்டிட பணிகள் ஆறு மாத காலத்திற்க்குள் முழுவதுமாக முடிந்து இன்று செல்லம்மாள் பாரதியாரின் 125 ஆண்டு திருமண நாளில் இருவரின் திருஉருவசிலையோடு அமைக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்துவைத்தனர்.

விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டபேரவை தலைவர் பேசும் போது, பாரதி கடையத்தில் வாழ்ந்த போது மனைவி தோளில் கை போட்டுச் செல்ல சமுதாயம் அனுமதிக்கவில்லை. அதே பகுதியில் பாரதியார் செல்லம்மாளின் தோளில் கை போட்டது போல் சிலை வைக்கப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழாவை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ள நிலையில் அவர் வராத காரணத்தினால் நான் திறப்பது மிக மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய முதல்வர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எவ்வாறு நினைவு செய்ய வேண்டும் என்பதை அவரே அறிவார் அவ்வாறாக எட்டயபுரத்தில் பாரதியாரின் வீட்டை நினைவுச் சின்னமாக்கியவர் கருணாநிதி. இன்று ஸ்டாலின் பாரதியாரின் நினைவு நாளை அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறார். பின்னர் மகாகவி பிறந்தநாள் அன்று சிறந்த எழுத்தாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி கொடுத்து கௌரவப்படுத்தி வருகின்றார். தொடர்ந்து இந்தியாவிலுள்ள முதலமைச்சர்களின் தலைசிறந்த முதலமைச்சராக தற்போது அவள் திகழ்ந்து வருவது பெருமைக்குரியதாக உள்ளது எனவும் அவர் அப்போது புகழாரம் சூட்டினார்.

இந்த நிகழ்வில் பொதுநூலக இயக்குநர் இளம்பகவத், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரி அனந்தன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாபன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், நூலகர்கள், பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Jun 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  8. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  9. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’