/* */

கடையம் அருகே கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மனு

கடையம் அருகே எலும்பு அரவை மில், கோழி பண்ணைகளால் சுகாதார சீர்கேடு. நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

கடையம் அருகே கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மனு
X

பொட்டல்புதூர் கிராமத்தில் கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகள்.

எலும்பு அரவை மில், கோழி பண்ணைகளால் சுகாதார சீர்கேடு - குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுவாச பிரச்சினை காரணமாக மருத்துவமனை செல்லும் அவலம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநாதபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அருகேயுள்ள பொட்டல்புதூரிலிருந்து இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் கிராமத்தின் அருகேயே எலும்பு அரவை மில்லும், இந்த கிராமத்தில் சுமார் 4 கோழிப் பண்ணைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த எலும்பு மில் மற்றும் கோழி பண்ணைகளால் கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொடர்ந்து மழை, பனி, காற்று உள்ளிட்ட காலங்களில் இந்த கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாசு கலந்த காற்றை இந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சுவாசிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. மேலும் எழும்பு மில்லின் கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கிராமத்தை சுற்றி ஆங்காங்கே வீசியுள்ளனர். இதனால் கிராம மக்கள் நோய்வாய்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருவதாக மக்கள் தெரிவத்தனர்.

இதனால் எலும்பு அரவை மில், கோழிப்பண்ணைகளை மூட வலியுறுத்தி கிராம மக்கள் குழந்தை, சிறுவர்களுடன் கடையம் யூனியனில் திரண்டு மனுவும் அளித்துள்ளனர். மேலும் பல்வேறு துறையினருக்கும் உரிய நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளதாக அவர்கள் தெரிவி்த்தனர்.

இதுகுறித்து அதே கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் கூறுகையில் எங்கள் கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதால் எங்கள் ஊர் இளைஞர்களுக்கு பெண் கொடுப்பதற்கு பெண் விட்டார்கள் தயங்கி வருவதாக கூறினார்.

Updated On: 27 Jan 2022 3:31 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்