/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல்: சிவசைலம் கிராம ஊராட்சியில் இன்று மறு வாக்குபதிவு

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சியில் இன்று மறு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக கடந்த 6ம் தேதி ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் முடிந்து 3 நாள் ஆன நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சியில் உள்ள வார்டு 2 மற்றும் 3 வது வார்டுக்கு வாக்களிக்க பொதுவான அத்ரிகலா பள்ளி வாக்கு சாவடியில் 2 வது வார்டுக்கு வாக்காளர்களும் 3 வது வார்டுக்கு வாக்காளர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2 வதுவார்டு உறுப்பினர் போட்டியுன்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து வாக்குப்பதிவின் போது 3வது வார்டுக்கு 203 ஓட்டு உள்ளதால் வாக்குபதிவு செய்யும்போது ஓட்டுச்சீட்டு குறைந்த போதும், வாக்கு சீட்டின் நிறம் ஒரே மாதிரியாக இருந்த நிலையில் 2 வது வார்டை சேர்ந்த வேட்பாளர்கள் 45 பேர் 3 வது வார்டு உறுப்பினருக்காக வாக்களித்தது கண்டறியப்பட்டது. இந்த குளறுபடி குறித்து கடையம் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த வாக்கு சாவடியில் மட்டும் இன்று 9ம் தேதி மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து சிவசைலம் ஊராட்சி செயலர் மூக்காண்டி சம்பந்தப்பட்ட வார்டுக்கு சென்று இன்று மறு வாக்குபதிவு உள்ளது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவித்தார். இதனையடுத்து இன்று காலை கொட்டும் மழையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 9 Oct 2021 10:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  6. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  8. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  10. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?