தடுப்புச்சுவர்கள் அகற்றம்.: ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

முதலியார் பட்டி, காந்தி நகர் 5 -ஆவது, 6 -ஆவது, தெருவின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர்களை போலீசார் அகற்றினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தடுப்புச்சுவர்கள் அகற்றம்.: ஊராட்சி தலைவருக்கு பாராட்டு
X

ஊராட்சி மன்ற தலைவி மைதீன் பிவி அசன் தலைமையில், காவல்துறையினர் முன்னிலையில் தடுப்புச் சுவர்கள் அகற்றப்பட்டன.

தடுப்புச்சுவர்கள் அகற்றம்.ஊராட்சி தலைவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டி, காந்தி நகர் 5 வது, 6 வது, தெருவின் நடுவில், பல ஆண்டுகளாக இருந்த தடுப்புச்சுவர்கள் போலீசார் முன்னிலையில் அகற்றப்பட்டது.

காந்திநகர் ஐந்தாவது மற்றும் ஆறாவது தெருவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தெருவின் இறுதியில் பாதுகாப்பு கருதி தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னர் சுவர்களுக்கு பின்புறம், பிஸ்மிநகர் பகுதியில், நூற்றுக்கணக்கான வீடுகள் உருவாகின. பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் அந்த தடுப்புச்சுவர்களை அகற்ற முற்ப்பட்டபோது, அதன் அருகில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர் கட்டி அப்துல்காதர் சார்பிலும், அப்பகுதி பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு மனுக்கள், மாவட்ட ஆட்சியர் வரை, அனைத்து அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் பல ஆண்டுகளாக தடுப்பு சுவர்கள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மெயின் ரோட்டிற்க்கும், நியாயவிலை கடைக்கு, பள்ளிக்கூடங்களுக்கு, அடக்கஸ்தலங்களுக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றி வரும் நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலியார் பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், இந்த போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தடுப்புச் சுவர்களை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று ஊராட்சி மன்ற தலைவி மைதீன் பிவி அசன் தலைமையில், காவல்துறையினர் முன்னிலையில் தடுப்புச் சுவர்கள் அகற்றப்பட்டன.

இ.யூ.மு.லீக் மாவட்ட அமைப்புச்செயலாளர் கட்டி அப்துல் காதர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாசில், வார்டு உறுப்பினர் காலித், ஊராட்சி மன்ற செயலாளர் துரைமுருகன் முஸ்லிம் லீக் பிஸ்மி நகர் பொறுப்பாளர் வஹாப், தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளர் ஆல்ஃபா, முதலியார்பட்டி ஜமாத் பொருளாளர் ஹசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2022 2:30 PM GMT

Related News