/* */

கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
X

கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, அம்பை, கடையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 4-1-2022 (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆழ்வாற்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழகுத்துபாஞ்சான், காசிதர்மம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப்பத்து, அரிகேசநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மானநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், அம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9.மணி முதல் மதியம் 2.மணி வரையும்,

ஆவுடையானூர், மணல் காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானுர் ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1.மணி முதல் மாலை 5.மணி வரையும் மின்தடை செய்யப்படும்

Updated On: 3 Jan 2022 7:32 AM GMT

Related News