ஆழ்வார்குறிச்சி: சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 3 பேர் கைது

ஆழ்வார்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆழ்வார்குறிச்சி: சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 3 பேர் கைது
X

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதைப் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், ஆழ்வார்குறிச்சிகாவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவன்குளம் ரயில்வே கேட் அருகே, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த அமல்ராஜ் (55) என்பவரை, சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் அருகே மது பாட்டில்களை விற்பனை செய்த மதன் (21) என்பவரை, சார்பு ஆய்வாளர் கமலாதேவி, மேலும் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களில் விற்பனை செய்ததிருவானை என்பவரின் மனைவி செண்பகவல்லி (69) என்பவரை சார்பு ஆய்வாளர் ஜெயக்குமாரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 88 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 30 Sep 2021 2:30 AM GMT

Related News