/* */

தென்காசி அருகே உலக சாதனை நிகழ்த்திய அரசு பள்ளி மாணவ- மாணவிகள்

தென்காசி அருகே வீர கேரளம் புதூர் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் உலக சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி அருகே உலக சாதனை நிகழ்த்திய அரசு பள்ளி மாணவ- மாணவிகள்
X

உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி. அந்த வகையில் மாணவச் செல்வங்களுக்கு இளமையிலேயே பல்வேறு திறமைகள் இருப்பதை கண்டறியவேண்டும். இதனை வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உள்ளது. அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து தங்கள திறமைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் இதற்கென்று தனியாக பணம் கட்டி பயிற்சி பெறுவது உண்டு.

ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அது போன்று தனியாக பயிற்சி எடுப்பது இயலாத காரியம். சில நேரங்களில் அரசு பள்ளியின் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களே பல்வேறு உதவிகளை செய்து அவர்களது திறமைகளை மேம்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஒரு நிகழ்வு தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் அரசு பள்ளியில் நடந்துள்ளது. அங்குள்ள மாணவர்களின் திறமைகளை கண்டறிந்த ஆசிரியர் ஒருவர் அவர்கள் சாதனை படைக்க முயற்சி மேற்கொண்டு அதனை நிகழ்த்தியும் உள்ளார். அது என்ன சாதனை என்பதை பார்ப்போமா?

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகபணிபுரிந்து வருபவர் மாலதி. இவர் உலக சாதனை படைக்க கடந்த 4 மாதங்களாக சில மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தின் தனிமங்களின் பெயர்களை ஒப்பிக்க பயிற்சி அளித்தார். தனிமங்களின் பெயர்களை கூறிக்கொண்டே சிலம்பம் சுற்றுதல், செல்போனில் வீடியோ எடிட் செய்தல், ரோபோட்டிக் கார் செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டனர். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளிக்கு வந்து, மாணவ, மாணவிகளின் மேற்கண்ட சாதனையை பதிவு செய்தனர்.

கர்ணா என்ற 8-ம் வகுப்பு மாணவர் கழற்றிய நிலையில் உள்ள ரோபோட்டிக் காரை மீண்டும் இணைத்தபடி தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களையும் 55 விநாடிகளில் ஒப்பித்தார். 60 சதவீத அறிவுசார் மாற்றுத் திறனாளியான சைபுல் இஸ்லாம் என்ற 8-ம் வகுப்பு மாணவர் தனிம அட்டவணை வரிசையில் உள்ள 20 தனிமங்களை 25 விநாடிகளில் ஒப்பித்துள்ளார்.

மகேஸ்வரி என்ற 8-ம் வகுப்பு மாணவி செல்போனில் காணொலியை எடிட் செய்தவாறு தனிம அட்டவணை வரிசையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 45 விநாடிகளிலும், சக்தி பிரபா என்ற 8-ம் வகுப்பு மாணவி சிலம்பம் சுற்றியவாறே 118 தனிமங்களை 50 விநாடிகளிலும் ஒப்பித்துள்ளனர். இவர்களின் உலக சாதனை முயற்சியை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், மண்டலத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் கண்காணித்து உலக சாதனையாக உறுதி செய்தனர்.

அரசு பள்ளி மாணவ மாணவிகளின் இந்த சாதனையை சக மாணவர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி உள்ளனர்.

Updated On: 17 Nov 2022 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை