/* */

மது போதையில் சிகிச்சையா? கொதித்தெழுந்த மக்கள்! அடுத்து நடந்தது என்ன?

மது அருந்திவிட்டு மருத்துவம் பார்த்த மருத்துவர்!மருத்துவமனைக்கு சீல் வைத்த கோட்டாட்சியர்

HIGHLIGHTS

மது போதையில் சிகிச்சையா? கொதித்தெழுந்த மக்கள்! அடுத்து நடந்தது என்ன?
X

பட விளக்கம்: மருத்துவமனைக்கு சீல் வைத்த கோட்டாட்சியர் லாவண்யா 

தென்காசி மாவட்டம் கடையம் தனியார் பல் மருத்துவமனைக்கு அதிரடி சீல்

மது நாட்டிற்கும் உயிருக்கும் கேடு என்ற வாசகத்தோடு மது பாட்டில்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் நிகழ்ச்சிகள் நடைபெற்று இருந்த போதிலும், தற்போது உள்ள சமூகம் அதனை பின்பற்றுவதில்லை. மதியினால் உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரை நாடுவோம். இங்கு மருத்துவரை மது போதையில் வைத்தியம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தனியார் பல் மருத்துவமனையில் மருத்துவர் மது போதையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த வீடியோ வைரலாகிய நிலையில் பல் மருத்துவமனைக்கு கோட்டாட்சியர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மது போதையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பல் பிடுங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளி, மது அருந்தி விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா? என்று கேட்டுள்ளார்.

தான் மது அருந்தியதை ஒப்பு கொண்ட மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்று சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வளை தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதெப்படி மது போதையில் சிகிச்சை அளிக்கலாம் என பொதுமக்களும் கொதித்தெழுந்துள்ளனர். பிரச்னை பெரிதாகிவிடுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க அரசு தரப்பிலும் வாய்வழி உத்தரவு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோட்டாட்சியர் லாவண்யா, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா தலைமையில் சுகாதாரத் துறையினர் பல் மருத்துவமனைக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

Updated On: 9 Oct 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை