/* */

கருவந்தா ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு

Project Development Plan -கருவந்தா ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு

HIGHLIGHTS

கருவந்தா ஊராட்சியில்  வளர்ச்சி திட்ட பணிகளை  நிறைவேற்ற  அரசு முடிவு
X

கருவந்தா ஊராட்சியில் கிராம  சபை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

Project Development Plan -தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவந்தா கிராம ஊராட்சியிலுள்ள சோலைச்சேரி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் தானியேல் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பேசும் போது தெரிவித்ததாவது :-

கருவந்தா முதல் சோலைச்சேரி வரை இணைப்புச் சாலை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. சோலைச்சேரி முதல் புதுர் வரை இணைப்பு கற்சாலை மற்றும் சோலைச்சேரி பெரிய குளத்தில் தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தல ஆய்வு செய்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊராட்சியில் வழங்கப்படும் குடிநீரில் குளோரினேசன் செய்து அனைத்து வீடுகளுக்கும் வழங்கவும் மற்றும் வீடுகள்தோறும் குளோரினேசன் மாத்திரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை வீடுதோறும் பொதுமக்கள் பிரித்து வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் மேற்பட்ட பைப்களில் தண்ணீர் சீராக வழங்க முடியாததால் பைப்லைன் படிப்படியாக புதுப்பிக்கப்படும் எனவும், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் புதிய பைப்லைன் பணிகள் நிறைவேற்றி தரப்படும் எனவும் தெரிவித்தார்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் கருவந்தா ஊராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தும் அரசின் முடிவுக்கு அந்த பகுதி மக்கள் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Oct 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்