காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்

ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்
X

ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அத்தியூத்து விலக்கில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஆலங்குளம் தனிவருவாய் ஆய்வாளர் பேச்சி, வட்டவழங்கல் அலுவலர் ஜெட்லெட் ஜெயா ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் இன்று மதியம் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது 50 கிலோ எடை கொண்ட 100 ரேசன் அரிசி மூட்டைகள் ஓரிடத்திலும், சற்று தொலைவில் 100 மூட்டைகளும் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. மொத்தம் ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான 200 ரேசன் அரிசி மூட்டைகளை வருவாய் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து ஆலங்குளம் நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

இந்த ரேசன் அரிசி மூட்டைகள் கேரளாவிற்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டதா? ரேசன் அரிசி கடத்தல் கும்பல் யார்? என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...