ஆழ்வார்குறிச்சி அருகே பெண் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்

ஆழ்வார்குறிச்சி அருகே பெண் மரணம் அடைந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆழ்வார்குறிச்சி அருகே பெண் மரணம்: உறவினர்கள் சாலை மறியல்
X

பெண் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி போராட்டம் செய்த பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள். 

ஆழ்வார்குறிச்சி அருகே அருகே பெண் மரணம் உறவினர்கள் சாலை மறியல்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி பாண்டியன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மகேந்திரவள்ளி (வயது 37). இவர் அப்பகுதியில் குளத்துக்கு நூறு நாள் வேலைக்கு செல்பவர். இவர்களுக்கு நந்து, விஜி என 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மகேந்திரவள்ளி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவருக்கு மறுநாள் கை, கால் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மகேந்திரவள்ளியின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர், மற்றும் வருவாய் துறையினர், உள்பட அதிகாரிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடையம் தலைமை மருத்துவர் கூறுகையில் 100% தடுப்பூசியால் இறக்க வாய்ப்பில்லை என கூறி அதன் பயனையும் எடுத்து கூறினார். மேலும் தாசில்தார் அவர்கள் கூறுகையில், முறையாக ஆய்வு செய்து அவர்களின் இரு பெண் குழந்தைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 2 July 2021 2:05 AM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. விளையாட்டு
  டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அபார வெற்றி
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 4. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 5. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 7. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 9. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...