ஆசிரியர் தம்பதியினரை கட்டி போட்டு 140 சவரன் மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளை

தென்காசி அருகே ஆசிரியர் தம்பதியினரை கட்டி போட்டு 140 சவரன் மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆசிரியர் தம்பதியினரை கட்டி போட்டு 140 சவரன் மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளை
X
கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையானூர் சிதம்பர நாடார் தெருவில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தம்பதியினர் அருணாச்சலம்( 88) ஜாய் சொர்ண தேவி (83 ).இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு தம்பதி இருவரையும் மூன்று பேர் கொண்ட முகமூடிகள் அணிந்து வந்த மர்ம கும்பல் கட்டி போட்டு அவர்கள் வைத்திருந்த 140 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இன்று காலை அவர்களது மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் கட்டி வைக்கப்பட்ட நிலையில் இருந்தனர் உடனடியாக அவர்களது மகள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க காவல்துறையினர் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 July 2022 7:55 AM GMT

Related News