தென்காசி சுரண்டை அருகே தந்தை வெட்டிக் கொலை மகன் வெறி செயல்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை செய்து. வெச் செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசி சுரண்டை அருகே தந்தை வெட்டிக் கொலை மகன் வெறி செயல்
X

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணம் மெயின் ரோடு காலனியை சேர்ந்தவர் சக்கையா மகன் சுடலையாண்டி (70) இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மனைவி அன்னலட்சுமி கடந்த 15 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் தனது தயார் இறந்துவிட்டார் என மன வருத்தத்தில் மூத்த மகன் பெருமாள் (42) இருந்து வந்துள்ளார்.

பெருமாளுக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தனக்குரிய சொத்தை எழுதி தருமாறு தந்தை சுடலையாண்டியிடம் மகன் பெருமாள் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே சொத்து தகராறு முற்றவே இன்று காலை 7 மணியளவில் வயலில் தந்தையை அரிவாளால் வெட்டினார் மகன் பெருமாள். இதில் சுடலையாண்டி இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னி வளவன், சுரண்டை இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வீகே புதூர் சப் இன்ஸ்பெக்டர் காஜா முகைதீன் மற்றும் போலீசார் சுடலையாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை வெட்டிக்கொலை செய்த பெருமாளை கைது செய்து, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 20 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...