/* */

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 2 பேர் பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கனரக வாகனம் உரசியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.

HIGHLIGHTS

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 2 பேர் பலி
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கனரக வாகனம் உரசியதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த கீழ வெள்ளக்கால் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிமோகன் (29). வல்லம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (36). இவர்களின் நண்பர்கள் கட்டபொம்மன், மனோஜ்குமார், மதன் ஆகிய 5 பேர் காரில் திருநெல்வேலிக்கு போய்விட்டு நேற்றிரவு 10 மணியளவில் வீடுதிரும்பினர். இதில் முக்கூடலை அடுத்த இடைகால் சர்க்கரை ஆலையில் இருந்து பழுதடைந்த இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. ஆலங்குளம் பெட்ரோல் பங்க் அருகே வரும்போது, காரின் பக்கவாட்டில் எதிரே வந்த கனரக வாகனத்தில் கொண்டு சென்ற இயந்திரங்கள் உரசியது. இதில், கார் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது.

இதில் காரில் இருந்த ஹரிமோகன், சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டபொம்மனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் காரில் இருந்தவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கனரக வாகன டிரைவர் மன்னார்குடியை சேர்ந்த மோதிலால் (60) என்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 8 March 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?