இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து- இருவர் பலி

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து- இருவர் பலி
X

சுரண்டை அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள்.

தென்காசி மாவட்டம் சுரண்டையிலிருந்து - சாம்பவர்வடகரை செல்லும் மெயின்ரோட்டில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் கீழச்சுரண்டை, அம்பேத்கர் தெருவைச் சார்ந்த காசிமணி என்பவரது மகன் முத்துக்குமார் (30) கூலி வேலை செய்து வரும் இவர் தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் இல்லாத காரணத்தினால் உருட்டிக் கொண்டு பெட்ரோல் போடுவதற்காக சுரண்டையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆய்க்குடியில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் சிவா (22) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமுற்ற முத்துக்குமார் மற்றும் சிவா ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முத்துக்குமார் தென்காசி மருத்துவமனையில் உயிரிழந்தார். சிவா உடல்நிலை மேலும் மோசமடையவே மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுரண்டை போலீஸ் எஸ்ஐ ஜெயராஜ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 17 Feb 2021 8:14 AM GMT

Related News

Latest News

 1. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 2. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 3. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 4. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 5. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 6. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 7. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 8. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 9. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 10. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை