/* */

கர்ப்பிணிப்பெண்கள் நலம் பெற தமிழக அரசு வழங்கும் திட்டம் இதுதான்!

Government Schemes For Pregnant Ladies in Tamil Nadu - இத்திட்டத்தின் மூலம், குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை பெருமளவு குறைந்து உள்ளது.

HIGHLIGHTS

கர்ப்பிணிப்பெண்கள் நலம் பெற தமிழக அரசு வழங்கும் திட்டம் இதுதான்!
X

tamil nadu government schemes for pregnant ladies in tamil - கர்ப்பிணிப்பெண்கள் நலம் பெற தமிழக அரசு வழங்கும் திட்டம் இதுதான்!

Government Schemes For Pregnant Ladies in Tamil Nadu -தமிழ்நாடு அரசு, கர்ப்பிணிப் பெண்களின் நலன் கருதி பல்வேறு வகையான திட்டங்களை வகுத்து அவர்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் முதன்மையானது ஆகும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ. 12000 ரூபாயிலிருந்து ரூ. 18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கி உள்ளது.

இத்திட்டத்தின் மூலம், குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை பெருமளவு குறைந்து உள்ளது.

இந்தத் திட்டத்தில் எப்படி சேர்வது? : கர்ப்பிணிப் பெண்கள் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அந்த மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே ஒப்படைக்கலாம். இந்த திட்டத்தில் சேர எவ்விதக் கட்டணமும் இல்லை.

இந்த திட்டம் குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது, இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு பணம் வராமல் இருந்தாலோ அதற்கென்று அமைக்கப்பட்டு உள்ள பிரத்யேக எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் சேர, கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைந்தது 19 வயது இருக்க வேண்டும்.

பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ. 24 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்தப் பணம் ஒரே ரொக்கமாக வழங்கப்படாமல், ஐந்து தவணைகளாக பிரித்து வழங்கப்படும்.

இதுமட்டுமல்லாது, பயனாளிகளுக்கு ரூ. 4000 மதிப்பிலான ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கப்படும்.

கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தெரிந்தவுடன் 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற்று இருக்க வேண்டும். அல்லது 12 வாரத்திற்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 April 2024 9:19 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  3. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  4. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  6. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  7. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  9. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  10. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?