/* */

tamilnadu ex minister charge sheet filed முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து :குற்றப்பத்திரிகை தாக்கல்

tamilnadu ex minister charge sheet filed தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். இவர் மீது லஞ்சஒழிப்புத்துறையானது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 6பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

HIGHLIGHTS

tamilnadu ex minister  charge sheet filed  முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து :குற்றப்பத்திரிகை தாக்கல்
X

தமிழக முன்னாள் அமைச்சர் காமராஜ் (கோப்பு படம்)

tamilnadu ex minister charge sheet filed

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ் . இவர் தன்னுடைய பதவிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக அதாவது ரூ. 127 கோடி மதிப்புள்ள சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையானது இவர் மீது குற்றம் சாட்டியிருந்தது.

தமிழகத்தினைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகாலமாக இரு திராவிட கட்சிகளான திமுக, அதிமுக இவைதான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகிறது. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதற்கேற்ப இரு கட்சிகளுமே மாறி மாறி வழக்கு, புகார் என்பதே தொடர்ந்து வருகிறது.

தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரான காமராஜ் மற்றும் அவரது மகன்கள் 2 பேர் உட்பட 6பேர் மீது மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் 18150 ஆவணங்களைச் சேர்த்து 810 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையினை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுபோல் இன்னும் எத்தனை மாஜிக்கள் மீது வழக்கு தொடரப்போகிறார்களோ? என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும்போது இதுபோல் மாறி மாறி வசைபாடிக்கொண்டிருப்பது தேவையற்றது எனவும் ஒருசிலர் சொல்வதைக் காதில் வாங்க முடிந்தது.

தமிழகத்தினைப்பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்சி மாறியவுடனும் ஏற்கனவே பதவி வகித்தவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. ஏன் அதிமுக ஆட்சியின் போதே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு நடந்தது. இருந்தாலும் அவர் பதவி பறி போகவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ உயிருடன் இருந்தபோது அனைவரும் அவருக்கு பயந்து கொண்டுதான் இருந்தனர். காரணம் ஒவ்வொரு மாத அமாவாசை வந்தால் யாருடைய பதவி பறிபோகும் என்ற நிலையே அப்போது இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் வீட்டில் ரெய்டு புகார் என பல பிரச்னைகள் வந்தபோதும் எந்த அமைச்சரையும் மாற்றாமல் கடைசி நாள் வரை பதவியில் இருந்தால் முன்னாள் முதல்வர் இபிஎஸ் என்பது பெரும் சாதனை தானே.

Updated On: 11 July 2023 7:29 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி