/* */

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்
X

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று திருச்சியில் மாநில துணை தலைவா் துளசிமணி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி வேளாண் நிலைகள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை விளக்கி பேசினார்.

கூட்டத்தில் அயிலை சிவசூாியன்(திருச்சி), முல்லை(வேலூா்), பன்னீர் செல்வம்(தஞ்சை), பழனி(கிருஷ்ணகிாி), கிருஷ்ணமூா்த்தி(தூத்துக்குடி) பாஸ்கா்(தஞ்சை) காசிவிஸ்வநாதன், சின்னசாமி(தேனி) சின்னசாமி(தா்மபுாி), சேகா்(கடலூா்), வீரசேகா்(தஞ்சை), சுப்பையா(திண்டுக்கல்), வீரராஜ்(மயிலாடுதுறை), காமராஜ்(சிவகங்கை), செல்லவேலு(மதுரை),ரெங்கராஜ்(திருவாரூா்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்ள் வருமாறு:-

ஆரூரான் சர்க்கரை ஆலை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் திருமங்களங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரைஆலை முதலாளியின் மோசடியை கண்டித்து 30 நவம்பர் முதல்அந்த ஆலைக்கு கரும்பு கொடுத்துவந்த விவசாயிகள் ஆலையின் முன்பாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்குகொண்டு ஆதரவு தெரிவித்தது.

கரும்பு கொடுத்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு 2014-2018வரை மத்திய மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய ஊக்கத் தொகைமற்றும் 2016 2018 வரை கரும்பு வழங்கியதற்கான நிலுவைத் தொகை ரூ.85 கோடியை பல ஆண்டுகளாக கொடுக்காமல் ஏமாற்றியதுடன் ஆலை நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை அடமானம் வைத்து வங்கிகளில் கரும்பு சாகுபடிக்காக பெற்றசுமார் 300கோடி ரூபாய்கடன் தொகையையும் திருப்பி செலுத்தாது விவசாயிகளை ஏமாற்றியுள்ளது.

அரசே ஏற்க கோரிக்கை

வங்கிகள் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருவதால் தங்களுக்கு வரவேண்டிய பணத்தையும் இழந்துள்ளதுடன் புதியகடன்கள்பெற முடியாமலும் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர்கள் அரசுக்கு தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர். ஆனால் இந்த ஆலை நிர்வாகி யின் மீதுஉரியநடவடிக்கையை கடந்த ஆட்சி எடுத்திடாத நிலையில்.அரசே இந்த ஆலையை ஏற்று நடத்தும் என்று தற்போதைய ஆட்சியினர் அப்போது கூறியதை நம்பி விவசாயிகள் இருந்தனர்.

இந்நிலையில் இந்த ஆலையை ஹால்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டனர். இதன்பின்மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கரும்பு பணம் பாக்கியில் 57சதம்தொகை மட்டுமே வரும் ஒரு வருடத்திற்குள் நான்கு தவணைகளாக கொடுக்கப்படும், வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன்பாக்கி எங்க ளுக்கு பொறுப்பு இல்லை என்று புதிய நிர்வாகம் கூறிய நிலையில் போராட்டம் தொடர்கிறது.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

1984இல் போபாலில் ஏற்பட்ட விஷவாயு விபத்தில் பல்லாயிரம் பேர் இறந்தார்கள்.பல லட்சம் பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டார்கள்.இதன்உரிமையாளர் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு வராமல் இந்த ஆலையை விற்பனை செய்துவிட்டார்.நீதிமன்றமோ இந்த கம்பெனியை வாங்கிய நிர்வாகமே இதற்குரிய இழப்பீட்டை கொடுக்கபொறுப்பாகும் எனதீர்ப்பளித்தது.சாதாரணமாக கிராமங்களில் நிலம் வாங்குகிற போது விற்ற இடத்தில் ஏதும் வில்லங்கம்ஏற்பட்டால்.. தானே பொறுப்பு என எழுதி கொடுத்து ஈடு செய்யும்நடைமுறை இன்றைக்கும்உள்ளதே. இவை எதையும் பின்பற்றாது திட்டமிட்டு மோசடி செய்த இந்த நபர் மீது உரிய குற்றவியல்நடவடிக்கை எடுத்திடவேண்டும். இந்த ஆலையை அரசேஏற்று நடத்திட வேண்டும். இதன் மூலம் வங்கிகளுக்கு சேர வேண்டிய 300 கோடி ரூபாயை அரசே திருப்பி செலுத்தி விவசாயிகளை வங்கி சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய பாக்கி தொகை 85கோடியை வட்டியுடன்அரசே வழங்கிட வேண்டும் என்ற இவர்களின்கோரிக்கையை தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு உரிய தீர்வுகாணவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 22 -12 -2022 தமிழ்நாடு முழுவதும் உள்ள கரும்பாலைகள் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு இழப்பீடு

கடந்த இரு மாதங்களில் தொடர் மழை இல்லாமல். போனாலும் அடை மழையாக பொழிந்ததால் பல பகுதிகளில் ஆறாக பெருக்கெடுத்து நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது. இதனால் அப்பகுதிகளில் பெருமளவு வேளாண் உற்பத்தி மகசூல் பாதித்துள்ளது. கொள்ளிடத்தின் தாழ்வான பகுதிகளில் புகுந்தநீர் ஒரு வார காலத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி குடியிருப்புகளும், வேளாண் பயிர்களும் மகசூலும்பெருமளவு பாதித்துள்ளது. பல இடங்களில் கால்நடைகள் இறந்துள்ளன.இப்படி தமிழகத்தின் பல இடங்களில் நெல் பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. பல நாட்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததால் சில இடங்களில் இப்பயிர்கள் இனி பிழைக்க வாய்ப்பில்லை. எனவே தமிழக அரசு பாதிப்பிற்குள்ளாகி உள்ள நெல் மற்றும் வாழை, நிலக்கடலை, பூக்கள், உளுந்து, பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு பாதிப்பின் அளவை கணக்கீடு செய்து பாதிப்பிற்கு ஏற்ப உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை உடன் எடுத்திட வேண்டும் .

கோவில் நிலம் பிரச்சினை

தமிழ்நாடு அளவில் வழிபாட்டு நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், மடம் மற்றும் சத்திரம் ஆகிய நிலங்களின் குத்தகை சாகுபடியாளர்கள், குடியிருப்பாளர்கள் நில உரிமை பாதுகாப்பு மாநாட்டை மயிலாடுதுறையில் வரும் ஜனவரி 5 ம்தேதி ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகள் பங்கு கொள்ளும் முறையில் நடத்துவது. தலைமுறை வழியாக அனுபவித்து வாழ்ந்து வரும் இவர்களைஅரசு இயந்திரத்தையும் நீதிமன்ற தீர்ப்பையும் காரணம் காட்டி நிலத்திலிருந்தும் குடியிருப்பில் இருந்தும் வெளியேற்றுகிற செயலை கண்டித்து.. இவர்களின் வாழ்விடத்தை வாழ்வுக்கு அடிப்படையாக திகழும் சாகுபடி நிலத்தை நிரந்தர உரிமையாக்கிடும் முறையில் தீர்மானித்திட உள்ள இந்த மாநாட்டில் உரிமை பெற்றோர் அனைவரும் ண கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேற்கண்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 15 Dec 2022 1:05 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து