/* */

Tamil Calendar 2022 February-2022ம் ஆண்டு பிப்ரவரி மாத காலண்டர்..! வரலாறு தெரிஞ்சுக்கங்க..!

Tamil Calendar 2022 February-இந்த செய்தியில் பிப்ரவரி மாத நாள் காலண்டர் மற்றும் மாத காலண்டரும் தரப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

Tamil Calendar 2022 February-2022ம் ஆண்டு பிப்ரவரி மாத காலண்டர்..! வரலாறு தெரிஞ்சுக்கங்க..!
X

tamil calendar 2022 february-நாட்காட்டி (கோப்பு படம்)

Tamil Calendar 2022 February-நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும்.

காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது நவீன முறையில் உருவாக்கப்படும் கணினிகள், மடிக்கணிகள் போன்றவற்றில் உள்ள நாட்காட்டிகளில் எதிர்வருகின்ற நிகழ்வுகள் மற்றும் பணிகளை ஞாபகம் செய்வதற்கான அமைப்புகள் உள்ளன. இவை குறிக்கப்பட்ட நாளில், குறித்த நேரத்தில் ஓசை எழுப்பி பயனருக்கு ஞாபகம் செய்கின்றன. இவ்வசதி புதிய தொழில்நுட்பம் அடங்கிய கைபேசியிலும் உள்ளது.

நாட்காட்டி என்பது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக கூட அமையலாம், உதாரணமாக நீதிமன்ற நாட்காட்கள் இந்த வகையைச் சார்ந்தவை.

'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதே 'காலண்டர்' என்ற ஆங்கிலச் சொல் ஆகும். 'கலண்டே' என்றால் 'கணக்கினைக் கூட்டுவது' என்று பொருள். கலண்டே (kalendae) என்பதானது இலத்தீனில் ஒவ்வொரு மாதங்களில் வருகின்ற முதல்நாளின் பெயராகும். தமிழில் நாட்காட்டி என்பது, நாள் + காட்டி நாட்களை காட்டுகின்ற அல்லது குறிப்பிடுகின்ற பொருளில் வழங்கப்பெறுகிறது.

tamil calendar 2022 february

கால நிகழ்வுகளின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சுழற்சிகளுடைய நாட்காட்டிகள் கீழே தரப்பட்டுள்ளன :

சந்திரனின் இயக்கத்தைக் கணக்கிட்டு உருவாக்கப்பட்டுள்ள சந்திர நாட்காட்டி - உதாரணம்: இசுலாமிய நாட்காட்டி

சூரியனின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரிய நாட்காட்டி - உதாரணம்: ஈரானிய நாட்காட்டி

சூரியன் மற்றும் சந்திரன் இரண்டின் இயக்கத்தினையையும் கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள சூரியசந்திர நாட்காட்டி - உதாரணம் இந்து நாட்காட்டி

வீனஸ் கிரகத்தின் இயக்கத்தினை கணக்கிட்டு உருவாக்கப்பெற்றுள்ள நாட்காட்டிகளும் வழக்கத்தில் இருந்துள்ளன. உதாரணம் பண்டைய எகிப்து நாட்காட்டி. இவை பெரும்பாலும் பூமத்திய ரேகை அருகே அமைந்துள்ள நாகரீகங்கள் பின்பற்றபட்டு வந்துள்ளன.

வார சுழற்சி முறையானது இதுபோன்ற எதனுடைய இயக்கத்தினையும் தொடர்புடையதல்ல. எனினும் சந்திரனின் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

மிகவும் பொதுவான நாட்காட்டியானது ஒன்றுக்கும் மேற்பட்ட சுழற்சி வகைகளை உள்ளடக்கியது. இது பல நாட்காட்டிகளின் எளிமையான தொகுப்பாகும். உதாரணமாக ஹீப்ரூ நாட்காட்டியானது ஏழு நாட்களை உடைய வாரம் என்ற விதியை உடையது. அதனால் ஏழு நாட்களை கொண்ட வாரம் என்பது ஹீப்ரூ நாட்காட்டின் ஒரு சுழற்சி முறையாகும். மிகவும் எளிமையான இந்த நடைமுறையைத்தான் மேற்கத்திய சமூகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

tamil calendar 2022 february

அத்துடன் கிரெகொரியின் நாட்காட்டியானது வாரம் ஏழு நாள் என்ற முறையினை கொண்டதல்ல. எனவே மேற்கத்திய நாடுகளில் பயன்பாட்டிலுள்ள நாட்காட்டியில் கிரெகொரியின் மற்றும் ஹீப்ரு நாட்காட்டிகள் பயன்படுத்துதலில் சில சிக்கல்கள் உருவாகின்றன. பொதுவாக இரு வகையான நாட்காட்டிகளை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் ஒழுங்கின்மையை தவிர்க்க, மேற்கத்திய நாட்காட்டியான பொது நாட்காட்டியில் கிரெகொரியின் நாட்காட்டியின் தேதி மற்றும் ஹீப்ரூ நாட்காட்டியின் வாரநாள் என இரண்டும் இடம் பெற்றுள்ளன.

இந்து நாட்காட்டி

இந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளில் இந்தியத் தேசிய நாட்காட்டியும் அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராகமிகிரர் (6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்தவை. இது திதி, வாரம், இருபத்தியேழு நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய அலகுகளை கொண்டுள்ளது.

கீழே தமிழ் தினசரி மற்றும் மாத நாட்காட்டி இங்கு தரப்பட்டுள்ளது.



























































அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 March 2024 10:33 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...