/* */

அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

HIGHLIGHTS

அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாகத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அனுமதி கேட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக உயர் நீதிமன்றம் இதேபோல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறை காவலில் அவரை எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்த நாட்களை விசாரணை நாட்களாக கருத கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி வரும் 12ம் தேதி வரை செந்தில்பாலாஜியை அமலக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார். நீதிமன்ற காவலுக்கு போன பின் அது எப்படி சட்ட விரோத கைதாக இருக்கும். நீதிமன்ற காவல் என்பது ஒரு கைதை அதிகாரபூர்வமாக்கிவிடுகிறது. அதனால் அவர் கைது செய்யப்பட்டது தவறு என்று சொல்ல முடியாது. அதோடு அவருக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவும் செல்லாது.

இதனால் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை இன்றி கூறி செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Updated On: 8 Aug 2023 4:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்