/* */

நாளை இரவு சூப்பர்மூன் வானில் தோன்றும் பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா?

இந்த சூப்பர் மூனுக்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது, 'தண்டர் மூன்' அல்லது 'ஹே அல்லது 'மெட் மூன்' என்று அழைக்கப்படுகிறது

HIGHLIGHTS

நாளை இரவு சூப்பர்மூன் வானில் தோன்றும்   பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா?
X

நாளை இரவு "சூப்பர்மூன்" வானில் தோன்றும்: பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா?

2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்(பெரு நிலவு) 13ம் தேதி இரவு வானில் தோன்றும். இந்த சூப்பர் மூனுக்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது, 'தண்டர் மூன்' அல்லது 'ஹே அல்லது 'மெட் மூன்' என்று அழைக்கப்படுகிறது

2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்(பெரு நிலவு) நாளை இரவு வானில் தோன்றும். இந்த சூப்பர் மூனுக்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது, 'தண்டர் மூன்' அல்லது 'ஹே அல்லது 'மெட் மூன்' என்று அழைக்கப்படுகிறது.பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4முறை நிலவு வரும்போது, சூப்பர் நிலவு தோன்றும். பூமி கோளுக்கு அருகே நிலவு வரும்போது, வழக்கத்தைவிட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும்.

நாசாவின் அறிக்கையின்படி, 2022, ஜூலை 13ம் தேதி புதன்கிழமை பிற்பகலில் இருந்து சூப்பர் மூன் வெளிப்படும். சூரியனுக்கு எதிராக வெளிப்பட்டு பூமிக்கு நிலவு காட்சியளிக்கும். கடந்த மாதம் சூப்பர் மூன் உருவானது, அதற்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சூப்பர் மூன் இந்தியாவுக்கு நெருக்கமாக இல்லை. ஆனால், இந்த சூப்பர் நிலவை இந்தியாவில் வியாழக்கிழமை (நள்ளிரவு 1மணி) அதிகாலையிலிருந்து பார்க்க முடியும். நாசாவின் கணக்கின்படி, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வானில் இருக்கும்.

சூப்பர் மூன் என்பது, நிலவு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமாக வரும்போது சூப்பர் மூன் தோன்றும். அப்போது, வழக்கத்தை விட நிலவு அளவில் பெரிதாகவும், ஒளி அதிகமாகவும் இருக்கும். சூப்பர் மூன் என்பது அதிகாரபூர்வப் பெயர் இல்லை. நாளை வரும் சூப்பர்மூன், பூமியிலிருந்து 3 லட்சத்து 57ஆயிரத்து 264 கி.மீ தொலைவில் தெரியும். கடந்த மாதம் வந்த ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் பூமியிலிருந்து 3,63,300 கி.மீ தொலைவில் இருந்தது. ஆனால் நாளை தோன்றும் பக் சூப்பர் மூன், ஏறக்குறைய 6ஆயிரம் கி.மீ குறைவாக பூமிக்கு அருகே வருவதால், வழக்கத்தைவிட பெரிதாக நிலவு தோன்றும்

கடந்த 1979ம் ஆண்டு ரிச்சர்ட் நோலே எனும் வானியல் நிபுணரால் வைக்கப்பட்ட பெயராகும். சூப்பர் மூன் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறைவரை தோன்றலாம். சூப்பர் மூன் வழக்கத்தைவிட 17 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும்இருக்கும்.சூப்பர்மூன் மற்ற நாட்களில் வரும் நிலவைவிட சற்றுதான் பெரிதாக இருக்கும், ஆனால் ஒளி அளவில் அதிகமான ஒளிவீச்சை வழங்கும். இந்த சூப்பர் மூன் வரும் காலத்தில் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பு, கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.2022ம் ஆண்டில் ஏற்கெனவே ஒரு சூப்பர் மூன் வந்துவிட்டது, நாளை 2-வது சூப்பர் மூன் வர உள்ளது. 3-வது சூப்பர் மூன் ஆகஸ்ட் மாதத்தில் வரும். அதன்பின் 2023 ஜூலை 3ம் தேதி சூப்பர் மூன் வரும்.

Updated On: 13 July 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...