/* */

ஐயப்ப பக்தர்களுக்காக எர்ணாகுளம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஐயப்ப பக்தர்களுக்காக எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஐயப்ப பக்தர்களுக்காக எர்ணாகுளம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
X

எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் தஞ்சை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாக இயக்கப்பட உள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் தற்போது ஐயப்ப சீசன் நிலவி வருகிறது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர். ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலும் பஸ்களிலேயே தங்களது பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள். வசதி படைத்த ஐயப்ப பக்தர்கள் தனி பஸ், தனி வேன், கார்களை பயன்படுத்துகிறார்கள்.

சபரிமலையை பொறுத்த வரை ரயில் வசதி மிகவும் குறைவு. ரயில் சேவையை பெற விரும்பும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் ரயில்வே துறை சார்பில் புதிய சிறப்பு வாராந்திர ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் சபரிமலைக்கு மிக அருகே இருக்கும் புனலூர் இரயில் நிலையம் வழியாக முதன்முறையாக இயக்கப்படவுள்ளது.

சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக ஐயப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான புனலூர் வழியாக அகல இரயில் பாதை மாற்றத்திற்குப் பிறகு முதன்முறையாக இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் மாநகர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை , புனலூர் (சபரிமலை), கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் வரை இயக்கப்பட உள்ளது.

28-நவம்பர்-2022 முதல் 03-நவம்பர்-2023 வரை திங்கள்தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்தோறும் தாம்பரத்திலிருந்தும் ஆறு சேவைகள் இயங்கும்.

இந்த ரயிலில்இரண்டுக்கு குளிர்சாதன பெட்டி - 1( 2 Tier AC),மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி - (3 Tier AC),படுக்கை வசதி பெட்டிகள் - 7(Sleeper Coach)பொது பெட்டிகள் - 2(General coach/Un Reserved Coach)மாற்று திறனாளிகள் பொது பெட்டிகள் - 2(SLRD)என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

இந்தச் சிறப்பு ரயிலுக்கு புனலூர் இரயில் நிலையத்திலிருந்து நேரடியாக கேரள அரசின சிறப்புப்பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டு உள்ளனர். பழைய 100 ஆண்டுகள் பாரம்பரிய சபரிமலை ரயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் இரயில் வழித்தடத்தை பயன்படுத்தி,ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா ஆகிய ஐயப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி யாத்திரை செல்லலாம். இந்த ரயில் சேவை ஐயப்ப பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும், கேரளா மாநில மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று ரயில்வே பயணிகள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 26 Nov 2022 4:16 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...