7 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு முருங்கை ஏற்றுமதி மண்டலம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
7 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு முருங்கை ஏற்றுமதி மண்டலம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
X

தமிழகத்தில் தற்போது வேளாண் துறைக்காகத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை சட்டப்பேரவையில் தமிழக வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் வேளாண்மை முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை அறிவித்தார்

அவற்றில் ஒன்றாகச் சிறப்பு முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தேனி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். இந்த மாவட்டங்களில் அதிக அளவில் முருங்கை வளர்ப்பு உள்ளதால் இங்கு இந்த மண்டலம் உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர், “முருங்கையில் உருவாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வது நல்ல லாபம் தரக்கூடியது ஆகும். எனவே முருங்கை ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.1 கோடி செலவில் மையம் ஒன்று மதுரையில் உருவாக்கப்படும். இந்த மையம் ஏற்றுமதிக்குத் தேவையான அளவு தரக் கட்டுப்பாடு, தேவை உள்ள நாடுகள் ஆகியவற்றைக் கண்டறிய உள்ளது.

மேலும் இந்த முருங்கை ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் இந்த மையம் மூலம் வழங்கப்பட உளது. ஐந்தே வருடங்களில் முருங்கை ஏற்றுமதி மூலம் ரூ 50000 கோடி அன்னிய செலாவணியை ஈட்ட முடியும். அதற்குத் தேவையான கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்புக்கள் விரைவில் இந்த மாவட்டங்களில் அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 March 2023 5:32 AM GMT

Related News