ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்தொட்டியை அப்புறப்படுத்த வலியுறுத்தல்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்தொட்டியை அப்புறப்படுத்த வலியுறுத்தல்
X

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மிதிலைப்பட்டியில் சேதமடைந்த நிலையில் உள்ள மேனிலை  நீர்த்தேக்கத்தொட்டி

மிதிலைப்பட்டியில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்தொட்டி விபத்து நேரும் முன் நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருக்கோளக்குடி பஞ்சாயத்துக்குள்பட்ட மிதிலைப்பட்டியில் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்ட் பூச்சுகள் அனைத்தும் வெடிப்பு ஏற்பட்டு விழுந்து, துருப்பிடித்த கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை.

இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதி நடுநிலைப்பள்ளி வளாகத்தின் உட்புறத்திலும் அங்கன்வாடி அருகிலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. விபத்து நேரிடும் முன் இதனை அப்புறப்படுத்திவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated On: 25 Nov 2021 7:00 AM GMT

Related News