/* */

பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம்: ஆட்சியர் தகவல்

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம்: ஆட்சியர் தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரி்வித்துள்ளார்.

2022-23ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் மீன்வளர்ப்போரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் நிலையான வருமானம் பெறுவதை உறுதி செய்திடவும் பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில், மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு மீன்தீவனம் உரங்கள் ஆகிய மீன்வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் பண்ணை பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன்வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்களுக்கான ஒரு அலகிற்கான செலவினம் ரூ36000-ல் 50 மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18000 வீதம் மானியம் வழங்கி மேற்படி திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில், பயன்பெற விரும்புவோர், சிவகங்கை மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில: விண்ணப்ப படிவத்தினை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 53, யூனியன் வங்கி மாடியில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை – 630561, தொலைபேசி எண்.04575 – 240848 என்ற முகவரிக்கு 18.08.2022 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

Updated On: 16 Aug 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!