/* */

நெற்குப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய் : விவசாயிகள் வழிபாடு

நெற்குப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய் : விவசாயிகள் வழிபாடு
X

நெற்குப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய் நிரம்பிய தற்கு வழிபாடு நடத்தி விவசாயிகள் கொண்டாட்டம்!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாய் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையினால் பல்வேறு பகுதிகளிலிருந்து வரத்துக் கால்வாய் மூலம் வந்த தண்ணீர் மூலம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.இதனால் மகிழ்ச்சி அடைந்த இப்பகுதி விவசாயிகள், முன்னோர்களின் பாரம்பரிய முறையில் கண்மாய் நிரம்பியதை கொண்டாடும் வகையில், மேளதாளம் முழங்க, பெண்கள் குலவையிட்டு வழிபாடு நடத்தினர். இதையடுத்து கண்மாயின் மையப்பகுதியில் உள்ள நாட்டுகல்லுக்கு இளைஞர்கள் நீந்தி சென்று பொட்டுப் பானையை கவிழ்த்து வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கண்மாய் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், நெற்குப்பை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பொதுப்பணித் துறையை சேர்ந்த அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி