விஜயகாந்த் பிறந்தநாள்: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய தே.மு.தி.க.வினர்

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை முதியோர் இல்லத்திற்கு தேமுதிகவினர் உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விஜயகாந்த் பிறந்தநாள்: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய தே.மு.தி.க.வினர்
X

சிவகங்கை முதியோர் இலத்தில் உணவு வழங்கும் தேமுதிகவினர்.

விஜயகாந்த் தனது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். அதேபோல், அவரது வழியில் தே.மு.தி.க.வினர் கடந்த 15 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு தினமாக ஏழை, எளியோருக்கு உதவி செய்து வருகின்றனர்.

அதன்படி, சிவகங்கை மேலூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவுகளை மாவட்ட செயலாளர் ம.திருவேங்கடம், மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட பொருளாளர் அருணா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர செயலாளர் தர்மராஜ் உள்ளிட்டோர் இணைந்து உணவுகளை வழங்கினார்.

இதனையடுத்து சிவகங்கை முத்துப்பட்டி மதுரை ரோட்டில், தேமுதிகவினர் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி ஒன்றிய உறுப்பினர்கள் மணிகண்டன், ராமகிருஷ்ணன், சக்தி, வி.ஜி.கண்ணன் மற்றும் நகர நிர்வாகிகள் மாரிமுத்து, முருகானந்தம், ஞானமுத்து, பிரபு மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Aug 2021 3:01 AM GMT

Related News