சிவகங்கை அருகே நின்ற கார் மீது லாரி மோதி விபத்து :சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கவிழ்ந்தது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை அருகே நின்ற கார் மீது லாரி மோதி விபத்து :சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
X

சிவகங்கை அருகே விபத்துக்குள்ளான மதுரையைச் சேர்ந்த டாக்டரின் கார்

சிவகங்கை அருகே நின்ற கார் மீது லாரி மோதி விபத்தில் மதுரையைச் சேர்ந்த பெண் டாக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுரை, அண்ணா நகரை சேர்ந்தவர் பெண் டாக்டர் இந்திரா ஆதப்பன்(69). இவர் சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு தனியாக தனது காரை ஓட்டிச்சென்றார்.

திருப்பத்தூரிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, மானாமதுரைக்குச் சென்ற டிப்பர் லாரியைக் கவனிக்காமல் திருப்பியுள்ளார். அப்போது திடீரென லாரியைப் பார்த்த பதற்றத்தில் என்ஜின் அணைந்து, கார் சாலையின் நடுவில் எதிர்பாராத விதமாக நின்று போனதாக கூறப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த டாக்டர் இந்திராஆதப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த, மதகுபட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் காரையும், லாரியையும் அப்புறப்படுத்தினர். காருக்கு அடியில் சிக்கியிருந்த இந்திரா ஆதப்பனின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 2021-09-22T12:18:09+05:30

Related News

Latest News

 1. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 2. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 3. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 4. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 5. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 6. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 7. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 8. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 9. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
 10. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்