/* */

சிவகங்கை அருகே சொக்கநாதபுரம் காட்டுப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல்

மரங்களை வெட்டி கடத்துபவர்கள் தொடர்பாக புகாரளித்தவர்கள் மிரட்டப்படுகின்றனர்

HIGHLIGHTS

சிவகங்கை அருகே சொக்கநாதபுரம் காட்டுப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல்
X

பைல்படம்

சொக்கநாதபுரம் காட்டுப் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்துவதால் விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வனவிலங்குகளால் கிராம மக்கள் அச்சம்.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ளது சொக்கநாதபுரம் கிராமம். சொக்கநாதபுரம், கோவில்பட்டி, அலவினத்தான்பட்டி மற்றும் மணிமுத்தாறு ஒட்டியுள்ள உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மான், குரங்கு, மயில், முயல் போன்ற ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக காட்டுப் பகுதியில் மரங்களை வெட்டி கடத்துவதாக புகார் எழுந்து வந்தது. இதுகுறித்து, அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறம் கிராம மக்கள், வனப்பகுதிகள் மரங்கள் குறைந்ததால் அங்கு வசித்த மான் போன்ற விலங்கினங்கள் உணவிற்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் விவசாய நிலத்திலும், கிராமத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

பிச்சம்மாள் (விவசாயி, ஆலவிளம்பட்டி): இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் கிராமத்தினுள் புகுந்த மலைப்பாம்பினை கிராமத்தினர் தீயணைப்பு துறை உதவியுடன் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். அன்றாடம் கூலி வேலைக்கு ஆண்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்றுவிடுவதால், வீட்டில் ஆடு, மாடு, முதியோர் மற்றும் குழந்தைகளுடன் தனித்திருக்கும் பெண்கள் அவ்வப்போது மலைப்பாம்புகளும் கிராமத்துக்குள் புகுந்து விடுவதால் அச்சத்தில் உள்ளனர்.

ரமேஷ் (ஆலவிளாம்பட்டி):

மரங்களை வெட்டி கடத்துபவர்கள் தொடர்பாக புகாரளித்தவர்கள் மிரட்டப்படுகின்றனர். வனத்தில் வசிக்கும் விலங்குகள் மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைவதைத் தடுக்க வனப்பகுதியை பாதுகாக்க வனத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராதா கணேசன் (சமூக ஆர்வலர், சொக்கநாதபுரம்):

காடுகளை அழிப்பதால் உணவு சங்கிலி அறுபட்டு பல்லூயிர் பெருக்கமும் பாதிக்கப்படுகின்றது. இதனைக் களைய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேணடும். இல்லை என்றால் வரும் காலங்களில், மனிதனைத் தவிற பிற உயிரினங்கள் அழிந்து போவதுடன், இயற்கையும் தனது கோர முகத்தை காட்டும் சூழல் ஏற்படும் என சொக்கநாதபுரம் கிராம மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Updated On: 27 Sep 2021 5:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?