ஊரடங்கில் உதவும் உள்ளங்கள்

சிவகங்கை நகர் பகுதிகளில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய சமூக ஆர்வலர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஊரடங்கில் உதவும் உள்ளங்கள்
X

சிவகங்கை நகர் பகுதியில் ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடித்து வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சாலைகளில் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடிய காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகள் என அவருக்கு உதவியாக உடன் இருக்கும் உறவினர்கள் என பலர் உணவில்லாமல் தவிர்த்து வருகின்றனர்.

அவர்களுக்கு உணவு வழங்கும் விதமாக "பசியில்லா சிவகங்கையை உருவாக்குவோம்" என்ற அமைப்பு சார்பில் நகர் பகுதிகளில் உள்ள பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் மதுரை முக்கு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மதியம் என சுமார் 100 பேருக்கு உணவு வழங்கி பலரது பசியை போக்கிய தொண்டு நிறுவனத்திற்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நல்ல உள்ளங்கள் உள்ள வரை பசியியை மட்டுமல்ல கொரானாவையும் விரட்ட முடியும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 25 April 2021 11:48 AM GMT

Related News