பள்ளி சாரா- வயது வந்தோர் கல்வி இயக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி: ஆட்சியர் தொடக்கம்

இதில் பங்கேற்ற குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பள்ளி சாரா- வயது வந்தோர் கல்வி இயக்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி: ஆட்சியர் தொடக்கம்
X

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில்  ஆட்சியர் மதுசூதனரெட்டி முன்னிலையில் நடைபெற்ற  கலை நிகழ்ச்சி.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் கற்போம் எழுதுவோம் 2020- 2021மாவட்ட அளவிலான சமுதாய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி துவக்கி வைத்தார்.

பொதுமக்களிடம் எழுத்தறிவை 100 சதவீதம் பரவலாக்கம் செய்வதற்காக கலை வடிவத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தின்கீழ் செயல்படும் கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் பொது மக்களிடையே கல்வி கற்பது குறித்தும் . அதேபோல், அனைவரும் பள்ளி செல்ல வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில், கலைநிகழ்ச்சி மற்றும் தப்பாட்டம் மூலம் கல்வி கற்பது குறித்த கலைக்குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கல்வி கற்றல் குறித்து முக்கியத்துவத்தினை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கலைக்குழுக்கள் வாயிலாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை, வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், பிரான்சிஸ் , லதா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Updated On: 30 Sep 2021 10:23 AM GMT

Related News