ஆசை வார்த்தைக் கூறி கல்லுாரி மாணவி பலாத்காரம்: தலைமறைவான வாலிபர் கைது

சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர் கைது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆசை வார்த்தைக் கூறி கல்லுாரி மாணவி பலாத்காரம்: தலைமறைவான வாலிபர் கைது
X

சிவகங்கையில் சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வாலிபர் லால் சரண்.

சிவகங்கை காமராஜர் காலனியை சேர்ந்தவர் லால் சரண். பிஜேபி பிரமுகரான இவர் சிவகங்கையில் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சிவகங்கையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, லால் சரண் கடைக்கு புகைப்படம் எடுக்க வந்த போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் காதலாக மாறி, கடந்த மூன்று வருடங்களாக இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், சட்டக்கல்லூரி மாணவி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து வரும் மாணவியை விட்டு, விட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு லால் சரண் வேறு ஒரு பெண்ணுடன் தலைமறைவாகியுள்ளார்.

இச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சட்டக் கல்லூரி மாணவி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் லால் சரண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லால் சரணை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அவர் சிவகங்கையில் கைது செய்யப்பட்டார்.

Updated On: 2021-08-10T07:04:53+05:30

Related News